Enable Javscript for better performance
பெண்களிடம் நகை பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்துச் சென்றவர்களைப் போலீஸார் தேடிவருகின்றனர்.

     மதுரை கூடல்புதூர் பகுதி முத்தமிழ் நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி ராஜலட்சுமி (33). இவர் அப்பகுதியில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் திடீரென ராஜலட்சுமி கழுத்தில் கிடந்த சங்கிலியைப் பறித்துச்சென்றார். அதன் மதிப்பு 12 பவுன் என போலீஸார் கூறினர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

      மதுரை அவனியாபுரம் மீனாட்சி நகர் வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவரது மனைவி சோலையம்மாள் (65). செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் இருந்து கடைக்கு பொருள் வாங்கச் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த இளைஞர் திடீரென அவரது கழுத்தில் கிடந்த மூன்றே முக்கால் பவுன் நகையை பறித்துச்சென்றார். இதுகுறித்து சோலையம்மாள் அளித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai