Enable Javscript for better performance
மரங்கள் பாதுகாக்கப்படுவதை அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன: தமிழ் வளர்ச்சித் துறை செயலர் மூ.ராசாராம்- Dinamani

சுடச்சுட

    

    மரங்கள் பாதுகாக்கப்படுவதை அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன: தமிழ் வளர்ச்சித் துறை செயலர் மூ.ராசாராம்

    By மதுரை  |   Published on : 09th September 2015 04:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மரங்கள் பாதுகாக்கப்படுவதை அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன என்று தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலர் மூ.ராசாராம் கூறினார்.

     உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் மரம் நடு விழா மற்றும் மரங்களும், ஆன்மிகமும் என்ற தலைப்பிலான சொல்லரங்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:

     ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில், அந்த இனத்தவர் பேசும் மொழியை அழித்தால் போதுமானது. ஆகவே, தாய் மொழியைக் காக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். அந்த வகையில், தமிழக அரசு தமிழைக் காக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலகத் தமிழ்ச் சங்கத்தின் மூலம் தமிழின் பெருமையை மேலும் வளர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்றார்.

    தமிழ் வளர்ச்சித் துறைச் செயலர் மூ.ராசாராம்: எல்லா மதங்களும் மரத்தைப் பாதுகாக்கும் வகையில் தங்களது நெறிமுறைகளை வகுத்துள்ளன. சங்க இலக்கியங்களில் மரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதைக் காண முடியும். தமிழகத்தின் பல ஊர்களுக்கு, மரங்கள் அடர்ந்த காடுகளே பெயர்களாக அமைந்திருக்கின்றன. அந்தளவுக்கு மக்களின் வாழ்வியலோடு மரங்கள் இரண்டறக் கலந்து இருப்பதை அறிய முடியும்.

    மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன்: பழங்காலத் தமிழர்களின் வாழ்வியல் முறை இயற்கையோடு இணைந்ததாக உள்ளது. குறிஞ்சி, முல்லை, மருந்தம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலங்கள் இதை உணர்த்துகின்றன. இயற்கையோடு இணைந்த வாழ்வியலை இனிய வாழ்வு என பழந்தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. அதைப் பின்பற்றி மரங்களையும், நீர்நிலைகளையும் பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றார்.

     முன்னதாக டாக்டர் தங்கராஜ் சாலையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்க கட்டட கட்டுமான வளாகத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கி வைத்தார். தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா, மதுரை மக்களவை உறுப்பினர்  ஆர்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர். தஞ்சை தமிழ்ப் பல்கலை. சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறைத் தலைவர் ச.சிவசுப்பிரமணியன், தமிழறிஞர் இளங்குமரனார், கவிஞர் சினேகன் ஆகியோர் சொல்லரங்கில் உரையாற்றினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai