Enable Javscript for better performance
மாநில அளவிலான வாலிபால் போட்டி: எஸ்.ஆர்.எம். பல்கலை. முதலிடம்- Dinamani

சுடச்சுட

    

    மாநில அளவிலான வாலிபால் போட்டி: எஸ்.ஆர்.எம். பல்கலை. முதலிடம்

    By மதுரை  |   Published on : 09th September 2015 04:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான வாலிபால் போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் முதலிடம் பெற்றது.

     வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான 13ஆவது ஆண்டு காமராஜர் நினைவு வாலிபால் போட்டி செப்டம்பர் 4 முதல் செப்டம்பர் 6 வரை நடைபெற்றது. சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 18 அணிகள் போட்டிகளில் பங்கேற்றன. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் மற்றும் பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி அணிகள் மோதின. இதில் எஸ்.ஆர்.எம் பல்கலை. அணி 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

     முதலிடம் பிடித்த எஸ்.ஆர்.எம். அணிக்கு ரூ.15 ஆயிரமும், இரண்டாம் இடம் பிடித்த ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி அணிக்கு ரூ.10 ஆயிரமும், மூன்றாம் இடம் பிடித்த சென்னை பிரசிடென்சி கல்லூரி அணிக்கு ரூ.6 ஆயிரமும், நான்காம் இடம் பிடித்த சென்னை டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி அணிக்கு ரூ.4 ஆயிரமும், ஐந்தாம் இடம் பிடித்த கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரிக்கு ரூ.3 ஆயிரமும், ஆறாம் இடம் பிடித்த திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலை. அணிக்கு ரூ.2 ஆயிரமும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

     பரிசளிப்பு விழாவுக்கு கல்லூரியின் துணைத் தலைவர் பெரீஸ் பி.மகேந்திரவேல் தலைமை வகித்தார். தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி தலைமைப் பொதுமேலாளர் எஸ்.செல்வன் ராஜாதுரை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளை வழங்கினார். கல்லூரி முதல்வர் எஸ்.அழகர்நாதன் வாழ்த்துரை வழங்கினார். உடற்கல்வி இயக்குநர் வு.குமார் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai