Enable Javscript for better performance
மேலவளவு காவல்நிலையத்துக்கு விவசாயி நிலம் தானம்- Dinamani

சுடச்சுட

    

    மேலவளவு காவல்நிலையத்துக்கு விவசாயி நிலம் தானம்

    By மேலூர்  |   Published on : 09th September 2015 04:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேலூர் வட்டம் மேலவளவு காவல்நிலையத்துக்கு சொந்தக் கட்டடம் கட்ட ஐந்தேமுக்கால் செண்ட் நிலத்தை விவசாயி ஒருவர் இலவசமாக அளித்துள்ளார். அந்த நிலத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டார்.

     மேலவளவு காவல்நிலையம் ஊராட்சி கட்டடத்தில் இயங்கி வருகிறது. காவல்நிலையத்துக்கு சொந்தக் கட்டடம் கட்ட இடம் தேடிவந்த நிலையில், அதேபகுதியைச் சேர்ந்த விவசாயி பாண்டி தனக்குச் சொந்தமான ஐந்தேமுக்கால் செண்ட் நிலத்தை இலவசமாக அளித்தார். அதன் அருகில் ஊருணி  புறம்போக்கு நாலேகால் செண்ட் நிலத்தை வருவாய்த்துறையினர் அளந்துகொடுத்தனர்.

     இதை மதுரை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டார். மேலூர் வட்டாட்சியர் கிருஷ்ணன், கொட்டாம்பட்டி வட்டார விரிவாக்க அலுவலர் வெற்றிவேல், ஊரகவளர்ச்சித் துறை செயற்பொறியாளர் செல்வராஜ் மற்றும் நில அளவைத்துறையினர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai