Enable Javscript for better performance
வங்கிக் கடனை திருப்பி செலுத்தாத நூற்பாலைக்கு சீல்- Dinamani

சுடச்சுட

    

    வங்கிக் கடனை திருப்பி செலுத்தாத நூற்பாலைக்கு சீல்

    By திருமங்கலம்  |   Published on : 09th September 2015 04:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாத   தனியார் நூற்பாலைக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைக்கப்பட்டது.

     திருமங்கலம் அருகே கட்ராம்பட்டியில் தனியாருக்குச் சொந்தமான நூற்பாலை உள்ளது. இந்த ஆலை நிர்வாகத்தினர் மதுரையில் உள்ள தனியார் வங்கியில் 2007ஆம் ஆண்டு ரூ.2 கோடியே 40 லட்சம் கடன் வாங்கியுள்ளனர். தற்போதுவரை கடனுக்கான அசல் மற்றும் வட்டி திருப்பி செலுத்தப்படாமல் இருந்ததாகத் தெரிகிறது.

     இதையடுத்து தனியார் வங்கி நிர்வாகத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியிடம் கொடுத்த புகாரின் பேரில், தனியார் நூற்பாலைக்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ஐ.ஏ.ஆர்.சி.யின் துணைத்தலைவர் அருணா மன்னத், சட்ட மேலாளர் ப்ளோரா, மண்டல துணைத் தாசில்தார் எல்.முத்துப்பாண்டி, வருவாய் ஆய்வாளர் எம்.மீனாட்சிசுந்தரம், கிராம நிர்வாக அலுவலர்கள் சுகுமார், முருகேசன் ஆகியோர் நூற்பாலைக்குச் சென்று, அங்கு வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்களை வெளியே அனுப்பிவிட்டு நூற்பாலைக்கு சீல் வைத்தனர். திருமங்கலம் தாலூகா காவல் ஆய்வாளர் எஸ்.குருவெங்கட்ராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai