சுடச்சுட

  

  108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கோரிக்கைகளை விளக்கி துண்டு பிரசுரம் விநியோகம்

  By திருமங்கலம்  |   Published on : 09th September 2015 04:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கட்டுப்படியான ஊதியம், 8 மணி நேரம் வேலை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை திருமங்கலத்தில் துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

   ஓய்வில்லாமல் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் வேலை வாங்குவதால், 108 சேவை விபத்துச் சேவையாக மாறிவருகிறது. எனவே 8 மணி நேர வேலை, கட்டுபடியான சம்பளம், அகவிலைப்படி வசதியுடன் தங்குமிடம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருமங்கலம் பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் துண்டு பிரசுரங்களை வழங்கி பிரசாரம் செய்தனர். இதில்  மாவட்ட அமைப்புச் செயலர் பரமசிவம், அவசர மருத்துவ உதவியாளர் துரைப்பாண்டி மற்றும் திருமங்கலம், பேரையூர் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கலத்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai