Enable Javscript for better performance
ஆரப்பாளையம், கோயில் பகுதியில் செப்டம்பர் 10 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    ஆரப்பாளையம், கோயில் பகுதியில் செப்டம்பர் 10 மின் தடை

    By மதுரை  |   Published on : 10th September 2015 05:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் என தெற்கு மெட்ரோ மின்பகிர்மான செயற்பொறியாளர் ரா.பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

     இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் ஆரப்பாளையம் பகுதியில் துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். ஆகவே அப்பகுதிகளில் காலை முதல் பிற்பகல் வரை மின்தடை ஏற்படும்.

     மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்: கீழ ஆவணிமூல வீதி, தளவாய் வீதி, எழுகடல் தெரு, அக்ரஹாரம், தெற்காவணி மூலவீதி, கீழ மாசி வீதி, வெங்கலக்கடைத்தெரு, நேதாஜி சாலை, தெற்குச்சித்திரை வீதி, வெள்ளியம்பல வீதி, கீழ, வடக்குச் சித்திரை வீதிகள், சுங்கம் பள்ளிவாசல் தெரு, யானைக்கல் பகுதி, திருமலைராயர் படித்துரை, வடக்கு மற்றும் தெற்குவெளி வீதிகள்.

     ஆரப்பாளையம் பகுதியில் புட்டுத்தோப்பு, சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ஆரப்பாளையம் கிராஸ், ஆரப்பாளையம் பேருந்து நிலையம், பொன்னகரம், அழகரடி, மோதிலால் மெயின் ரோடு 1 மற்றும் 2 தெருக்கள், ராஜேந்திரா மெயின் ரோடு, மேலப்பொன்னகரம் மெயின் ரோடு.

     பொன்னகரம் ஒர்க்ஷாப் ரோடு, கனகவேல் காலனி, ஆறுமுச்சந்தி, ஆட்டுமந்தை பொட்டல், சிம்மக்கல், வடக்கு வெளிவீதி, ராஜா மில் ரோடு, ஸ்காட் ரோடு, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, காலேஜ்ஹவுஸ்.

     மின்தடை நீக்க தொலைபேசி: மாநகராட்சிப் பகுதியில் ஏற்படும் மின்தடை குறித்த தகவல்களை தெரிவிக்க கணினிமயமாக்கப்பட்ட மின்தடை நீக்கும் மையம் 24 மணி நேரமும் செயல்படுகிறது. ஆகவே வீட்டு முகவரி, மின் இணைப்பு எண் ஆகியவற்றுடன் பிஎஸ்என்எல் தரைவழித் தொடர்பு தொலைபேசி எண் 1912 மற்றும் 0452-2520601, 0452-2520603, 0452-2568671, 0452-2568672 ஆகிய தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம் என மதுரை மின்பகிர்மான வட்டம் மேற்பார்வைப் பொறியாளர் மா.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai