Enable Javscript for better performance
இமானுவேல் சேகரன் நினைவு நாள்: பரமக்குடி செல்லும் வழி அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    இமானுவேல் சேகரன் நினைவு நாள்: பரமக்குடி செல்லும் வழி அறிவிப்பு

    By மதுரை  |   Published on : 10th September 2015 05:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை  (செப்.11) மதுரை பகுதியிலிருந்து பரமக்குடிக்கு வாகனங்கள் செல்லும் வழியை போலீஸார் அறிவித்துள்ளனர்.

    இதுகுறித்த மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகச் செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்தச் செல்லும் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்ட வாகனங்கள் அருப்புக்கோட்டை, திருச்சுழி, பார்த்திபனூர் வழியாகச் செல்லவேண்டும். புதுக்கோட்டை மாவட்ட வாகனங்கள் திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, பார்த்திபனூர் வழியாகவும், மதுரை, திண்டுக்கல், தேனி பகுதி வாகனங்கள் சிலைமான், திருப்புவனம், மானாமதுரை, பார்த்திபனூர் வழியாக பரமக்குடி செல்லவேண்டும். அஞ்சலி செலுத்த பரமக்குடி செல்வோர் தங்களது சொந்த வாகனங்களிலேயே செல்லவேண்டும்.

     அரசுப் பேருந்துகள்: மதுரை மாட்டுத்தாவணியிலிருந்து பரமக்குடி செல்லும் அரசுப் பேருந்துகள் விரகனூர் சுற்றுச்சாலை சந்திப்பு, சிலைமான், மானாமதுரை வழியாகச் செல்லும். மாட்டுத்தாவணியிலிருந்து ராமேசுவரம் செல்லும் அரசுப் பேருந்துகள், சரக்கு மற்றும் சுற்றுலா வாகனங்கள் சிவகங்கை சாலை, கருப்பாயூரணி, வரிச்சியூர், பூவந்தி, இளையான்குடி வழியாகச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai