Enable Javscript for better performance
இரு சிறுமிகளின் திருமணம் நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை அருகே புதன்கிழமை நடைபெறவிருந்த இரு சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், மணமகன்கள் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

     மதுரை மாவட்டம் மேலூர் மேலவளவு பகுதி புலிப்பட்டியில் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடக்கவிருந்தது குறித்து கவுசல்யா என்பவர் அளித்த புகாரின் பேரில் மேலூர் போலீஸார் வழக்குப்பதிந்து சிறுமி திருமணத்தை தடுத்து நிறுத்தினர். மேலும், மணமகன், சிறுமியின் தாய், தந்தை, மணமகன் தாய், தந்தை என 5 பேர் மீது வழக்குப்பதிந்துள்ளனர்.

     மதுரை கிழக்கு ஒன்றிய விரிவாக்க அலுவலர் சுசீலா(56) அளித்த புகாரின் பேரில் திருமோகூர் பகுதியில் சிறுமிக்கு புதன்கிழமை நடக்கவிருந்த திருமணத்தை செவ்வாய்க்கிழமை இரவு அதிகாரிகள் சென்று தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர், மணமகன் உள்ளிட்ட 7 பேர் மீது யா.ஒத்தக்கடை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai