Enable Javscript for better performance
கபடி வீரர்களுக்கு பாராட்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக கபடி வீரர்கள் இருவருக்கு தமிழக கபடி கழகம் சார்பில் மதுரையில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

     2010 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கபடி வீரர் ஜீவக்குமார் தங்கப்பதக்கம் பெற்றார். 2014 ஆம் ஆண்டு கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கபடி வீரர் ராஜகுரு தங்கம் வென்றார். இருவரும் தற்போது மைசூர் வங்கியில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் தமிழக கபடி கழகம் சார்பில் மதுரையில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.  மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.முருகன், தமிழக கபடி கழகத் தலைவர் சோலை எம்.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai