Enable Javscript for better performance
சோழவந்தான், சமயநல்லூரில் செப்டம்பர் 11 மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாவட்டம் சோழவந்தான், சமயநல்லூர்  பகுதிகளில் வெள்ளிக்கிழமை  மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் வி.ஆதிலட்சுமி அறிவித்துள்ளார்.

     இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சோழவந்தான் துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

    சோழவந்தான்

    மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: சோழவந்தான், தச்சம்பத்து, திருவேடகம், மேலக்கால், கச்சிராயிருப்பு, நாராயணபுரம், ஊத்துக்குளி, தென்கரை, முள்ளிப்பள்ளம், மண்ணாடிமங்களம், காடுபட்டி, இரும்பாடி, ஆலங்கொட்டாரம், ரிஷபம், ராயபுரம் மற்றும் சோழவந்தான்.

    சமயநல்லூர்

    சமயநல்லூர் பகுதிகளில் சமயநல்லூர், தேனூர், தோடனேரி, சத்தியமூர்த்தி நகர், வைரவநத்தம், நகரி, அதலை, பரவை, பொதும்பு, அலங்காநல்லூர், டி.மேட்டுப்பட்டி, ஊர்சேரி மற்றும் வாவிடமருதூர், விளாங்குடி சென்ட்ரல் மார்க்கெட்  ஆகிய பகுதிகள் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின்தடை செய்யப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai