Enable Javscript for better performance
தங்கச் சங்கிலி மாயம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் வீட்டில் வைத்திருந்த தங்கச்சங்கிலி மாயமானது குறித்து பெண் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

     மதுரை செல்லூர் கீழவைத்தியநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி சிவசங்கரி (27). செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூங்கும்போது தனது 1 பவுன் தங்கச்சங்கிலியையும், செல்லிடப் பேசியையும் மேஜையில் வைத்துள்ளார்.

     புதன்கிழமை காலை பார்த்தபோது தங்கச்சங்கிலி, செல்லிடப் பேசியைக் காணவில்லையாம். இதுகுறித்து செல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai