Enable Javscript for better performance
திருப்பதி புஷ்பயாக சேவைக்கு செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு- Dinamani

சுடச்சுட

    

    திருப்பதி புஷ்பயாக சேவைக்கு செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு

    By மதுரை  |   Published on : 10th September 2015 05:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பதி திருமலையில் ஆண்டு தோறும் நடைபெறும் பிரம்மோற்சவ புஷ்ப யாகத்துக்காக பூக்களை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட விரும்புவோர் பெயர்களைப் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

     இதுகுறித்து திருமலை ஸ்ரீவாரி சேவா மதுரைக் குழு தலைவர் ஏ.எஸ்.ராம்லால் விடுத்துள்ள அறிவிப்பு: திருப்பதி கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் பிரம்மோற்சவம் முடிந்த பின்னர் ஏழுமலையானுக்கு மலர்களால் புஷ்பயாகம், அர்ச்சனைகள் நடைபெறும்.  புஷ்பயாகத்துக்காக திருமலை பாபவிநாசம் சாலையில் உள்ள தோட்டத்துறை அலுவலகத்திலிருந்து, பல்வேறு மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட 18 வகை மலர்கள், ஆயிரக்கணக்கான கூடைகளில் நிரப்பிவைக்கப்பட்டு கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும்.  ஊர்வலத்தில் பக்தர்கள் யார்வேண்டுமானாலும் பங்கேற்கலாம். மலர்க்கூடைகளை தலையில் ஏந்தி ஊர்வலமாகச் சென்று கோயிலில் சமர்ப்பிக்கலாம்.

    ஆகவே நவம்பர் 18-ஆம் தேதி நடைபெறும் ஊர்வலத்தில் பங்கேற்க மதுரை ஸ்ரீவாரி சேவாக்குழுவின் ஆண், பெண் பக்தர்கள் திருமலை செல்கின்றனர். அங்கு தேவஸ்தானம் சார்பில் இலவச உணவு, தங்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

     ஆகவே 8 தினங்கள் தங்கி சேவையாற்றிட விரும்பும் பக்தர்கள் ஸ்ரீவாரி சேவா குழுத்தலைவர் ஏ.எஸ்.ராம்லாலை 9843184179 என்ற செல்லிடப் பேசியில் தொடர்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai