Enable Javscript for better performance
திருமங்கலத்தில் காவல்துறை ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருமங்கலத்தில் காவல்துறை ஆலோசனைக் கூட்டம்

    By திருமங்கலம்  |   Published on : 10th September 2015 05:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இமானுவேல்சேகரன் நினைவுநாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு திருமங்கலத்தில் காவல்துறை ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

    திருமங்கலம் இணைக்காவல் கண்காணிப்பாளர் வி.சசிமோகன் தலைமை வகித்தார்.  வாகன ஓட்டிகள், உரிமையாளர்களிடம், இமானுவேல் சேகரன் நினைவுநாள் கூட்டத்துக்கு செல்லும் வாகனங்கள் போலீஸார் குறிப்பிட்ட வழித்தடத்தில் மட்டுமே செல்லவேண்டும், வாகனங்களில் ஒலிபெருக்கிகள் கட்டக்கூடாது, வாகனத்தின் மேல் அமர்ந்து பயணம் செய்யக்கூடாது, ஆயுதங்கள், மதுபாட்டில்கள் கொண்டு செல்லக்கூடாது என்பன உள்ளிட்ட விதிமுறைகள் அறிவுறுத்தப்பட்டன.

    கூட்டத்தில், காவல் ஆய்வாளர்கள் எஸ்.அன்னராஜ், வி.குருவெங்கட்ராஜ், உதவி ஆய்வாளர் ஆனந்த் மற்றும் வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai