Enable Javscript for better performance
திருமங்கலம் சித்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் வனத்துறை சோதனை- Dinamani

சுடச்சுட

    

    திருமங்கலம் சித்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் வனத்துறை சோதனை

    By திருமங்கலம்  |   Published on : 10th September 2015 05:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருமங்கலத்தில் தனியார் சித்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் வனத்துறையினர் புதன்கிழமை இரவு நடத்திய சோதனையில் அரிய வகை ஆமை ஓடுகள் மற்றும் பவழப் பாறைகளை அரைத்து தயாரிக்கப்பட்ட மருந்துகள் கைப்பற்றப்பட்டன.

    திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் சித்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தில், அரிய வகை வனவிலங்குகளை பயன்படுத்தி மருந்துகள் தயாரிக்கப்படுவதாக வந்த வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தில் மாவட்ட வனத்துறை அலுவலர் நிகார் ரஞ்சன் தலைமையில், வனத்துறையினர் புதன்கிழமை இரவு சோதனை நடத்தினர். சோதனையில், அரிய வகை ஆமை ஓடுகள் மற்றும் பவளப்பாறைகளை அரைத்து தயாரிக்கப்பட்டிருந்த மருந்துப்பொடிகளை கைப்பற்றினர். இதன் மதிப்பு  ரூ.1.50 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இதுகுறித்து மாவட்ட வனத்துறை அலுவலர் நிகார் ரஞ்சன் கூறியது: இந்த நிறுவனம் பற்றி இணைய தளத்தில் பார்த்த போது, இவர்கள் அரியவகை வன விலங்குகளை பயன்படுத்துவற்கான தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டது. கைப்பற்றப்பட்ட பொருள்கள் மதுரை வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அதன் உண்மையான மதிப்பு கணக்கிடப்பட்ட பின் மற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்றார்.

    சோதனையில் உதவி வன பாதுகாவலர் (பயிற்சி) எம்.ஜி.கணேசன், மதுரை வனச்சரகர் எஸ்.வெற்றிவேல், உசிலம்பட்டி வனச்சரகர் வி.டி.சூரியநாராயணன், வனவர் எம்.கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai