Enable Javscript for better performance
புனித யாத்திரை வந்த முதியவர் விபத்தில் சாவு- Dinamani

சுடச்சுட

    

    மதுரைக்கு புனித யாத்திரை வந்த பெண் ஒருவர் வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.

     ஜம்முவில் இருந்து மாயாதேவி(88) என்பவர் தன் குடும்பத்தினருடன் மதுரைக்கு புனித யாத்திரை வந்துள்ளார். மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில் புதன்கிழமை காலை அருகில் உள்ள கடைக்குச் செல்வதற்காக சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியே வந்த ஆட்டோ மோதியதில் சம்பவ இடத்திலேயே மயங்கியுள்ளார். முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

     இதையடுத்து அவரது கணவர் ரமேஷ் வர்ஷா அளித்த புகாரின் பேரில் கரிமேடு போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai