Enable Javscript for better performance
பெண் தொழிலாளர் விழிப்புணர்வு கருத்தரங்கு- Dinamani

சுடச்சுட

    

    பெண் தொழிலாளர் விழிப்புணர்வு கருத்தரங்கு

    By வாடிப்பட்டி  |   Published on : 10th September 2015 05:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் பெண் தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

     சிவசுப்பிரமணியனார் அரங்கில் புதுதில்லி வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர்துறை சார்பாக, கிராம கல்வி வளர்ச்சி மையம் இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

     வாடிப்பட்டி ஒன்றியத் தலைவர் அன்னகளஞ்சியம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராஜேஷ்கண்ணா முன்னிலை வகித்தார். கிரட் குடும்ப நல ஆலோசகர் கண்மணி வரவேற்றார். 

    கருத்தரங்கில் பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு சட்டங்கள் பற்றி வழக்குரைஞர் ஜெயமணி, பாலியல் நோய்கள் மற்றும் தொற்றுநோய்கள் பற்றி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துவேல், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு தொழில் கடன்கள் பற்றி சென்ட்ரல் வங்கி மேலாளர் சேத்தன்குமார், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு பற்றி வழக்குரைஞர் அழகேசன் ஆகியோர் பேசினர். ஒருங்கிணைப்பாளர் கீதா நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai