Enable Javscript for better performance
மாநகராட்சி வருவாயை அதிகரிக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்: மேயர் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    மாநகராட்சி வருவாயை அதிகரிக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்: மேயர் வலியுறுத்தல்

    By மதுரை  |   Published on : 10th September 2015 05:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்க கூடுதல் கவனம் செலுத்தி அதிகாரிகள் செயல்படவேண்டும் என மேயர் வி.ராஜன் செல்லப்பா வலியுறுத்தினார்.

     மதுரை மாநகராட்சி வருவாய் இனங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஆணையர் (பொறுப்பு) செ.சாந்தி முன்னிலை வகித்தார். இதில் தலைமை வகித்து மேயர் ராஜன்செல்லப்பா பேசியது: மாநகராட்சியின் வருவாய் மூலமே வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளமுடியும். மக்கள் 75 சதம் வரியை செலுத்தி விடுகின்றனர். ஆகவே 25 சத வரியைத்தான் அலுவலர்கள் வசூலிக்கவேண்டியுள்ளது.

     வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகளுக்கு முறையாக வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறதா என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளவேண்டும். மாநகராட்சி வருவாயை அதிகரிக்க நடப்பு வரிகளை வசூலிப்பதில் கவனம் செலுத்துவது அவசியம்.

     பழைய வார்டுகளில் வரி விதிப்பு இல்லாத வீடுகளை ஆய்வு செய்து வரி விதித்து வசூலிப்பது அவசியம். நிலுவையில் உள்ளவற்றையும் சம்பந்தப்பட்டோர் வசூலிப்பது அவசியம். மாநகராட்சி வருவாயைக் கூடுதலாக்கும் நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்திடவேண்டும் என்றார். ஆய்வுக்கூட்டத்தில் உதவி ஆணையர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai