Enable Javscript for better performance
முத்தாலம்மன், அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    முத்தாலம்மன், அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

    By பேரையூர்  |   Published on : 10th September 2015 05:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வி.அம்மாபட்டி முத்தாலம்மன், அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

    மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகே  வி.அம்மாபட்டியில் முத்தாலம்மன் மற்றும் அய்யனார் கோயில் கும்பாபிஷேக விழா செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெற்றது. இதில் செவ்வாய்க்கிழமை காலை அக்னீஸ்வரன் கோயிலிலிருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது, பின்னர் மாலையில் யாகஜால பூஜை தொடங்கியது. புதன்கிழமை காலை முத்தாலம்மன் மற்றும் அய்யனார் கோயிலில்  கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் வி.அம்மாபட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபி ஷேகத்தை தரிசித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. ஏற்பாடு களை விழாக்குழுவினர் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai