Enable Javscript for better performance
மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மதுரை வில்லாபுரத்தில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 4 பவுன் நகையைப் பறித்துச் சென்றவர்களைப் போலீஸார் தேடிவருகின்றனர்.

     வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவரது மனைவி சோலையம்மாள்((65). இவர் செவ்வாய்க்கிழமை இரவு அதே பகுதியில் உள்ள மகள் வீட்டுக்குச் சென்று விட்டு நடந்து வந்து கொண்டிருந்தாராம். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், சோலையம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன்  நகையைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் அவனியாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai