Enable Javscript for better performance
வரவேற்பு பிளக்ஸ்போர்டு: தேமுதிகவினர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    வரவேற்பு பிளக்ஸ்போர்டு: தேமுதிகவினர் மீது வழக்கு

    By மதுரை  |   Published on : 10th September 2015 05:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் அனுமதியின்றி வரவேற்பு பிளக்ஸ் போர்டுகள் வைத்ததாக தேமுதிகவினர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

    மதுரை கூடல்நகர் பகுதியில் உள்ள பாசிங்காபுரத்தில் புதன்கிழமை மாலை மக்கள் நலத்திட்ட விழாவில் பங்கேற்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் வந்திருந்தார்.

    இதற்காக செவ்வாய்க்கிழமை இரவு கூடல்புதூர் பகுதி சாலையில் தேமுதிகவினர் வரவேற்பு பிளக்ஸ் போர்டுகள் வைத்தனர். இந்நிலையில பிளக்ஸ் போர்டுகள் அனுமதியின்றியும், போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையிலும் அமைந்திருந்ததாக காசிமாயன் உள்ளிட்ட 6 தேமுதிகவினர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதது என கூடல்புதூர் போலீஸார் கூறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai