Enable Javscript for better performance
வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி- Dinamani

சுடச்சுட

    

    வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலயத் தேர்பவனி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

    ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி திருப்பலி, குணமளிக்கும் வழிபாடு, நற்கருணை ஆராதனை, ஒப்புரவு அருட்சாதனம் போன்றவை நடைபெற்றன. இதில் பங்குத் தந்தைகள், பங்கேற்றனர்.  விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்ப்பவனி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.  புதன்கிழமை காலை அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டது.

    ஏற்பாடுகளை திருத்தல அதிபர் எ.ஜோசப், உதவிப் பங்குத்தந்தை வளன், அருள்மொழி ஆசிரியர் சி.இருதயராஜ், அகஸ்டின் காரமல் மற்றும் துறவிகள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai