Enable Javscript for better performance
விலையில்லா மடிக்கணினிக் கோரி மாணவர் சங்கத்தினர் மனு- Dinamani

சுடச்சுட

    

    விலையில்லா மடிக்கணினிக் கோரி மாணவர் சங்கத்தினர் மனு

    By மதுரை  |   Published on : 10th September 2015 05:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விலையில்லா மடிக்கணினியை தாமதமின்றி வழங்க வலியுறுத்தி முதன்மை கல்வி அலுவலரிடம் இந்திய மாணவர் சங்கத்தினர் புதன்கிழமை மனு அளித்தனர்.

     அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குவது மற்றும் பேருந்து இலவசப் பயண அட்டைகள் வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தக்கூடாது. இதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கண்காணித்து விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் 30 பேர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளிக்க வந்தனர்.

     அங்கு முதன்மைக் கல்வி அலுவலரை சந்திக்க முடியாத காரணத்தால், அலுவலரின் நேரடி உதவியாளர் அனந்தராமனிடம் கோரிக்கை மனுவை அளித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் செல்வா தலைமை வகித்தார், மாவட்டச் செயலர் பாவல், துணைச் செயலர்கள் வேல்தேவா, முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai