Enable Javscript for better performance
வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி அக்.10 இல் தொடக்கம்: ஆட்சியர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி அக்.10 இல் தொடக்கம்: ஆட்சியர் தகவல்

    By மதுரை  |   Published on : 10th September 2015 05:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வைகை ஆற்றைத் தூய்மைப்படுத்தும் பணி அக்.10 ஆம் தேதி தொடங்குகிறது என்று மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

     மேற்குத் தொடர்ச்சி மலையில் வருசநாடு பகுதியில் தோன்றி ராமநாதபுரம் மாவட்டம் வரை சுமார் 258 கி.மீ தூரம் பயணம் செய்யும் வைகை ஆறு சங்க இலக்கியங்களில் பாடப்பட்டுள்ளது.

    மதுரை மாநகரில் வைகை ஆறு கடந்து செல்லும் பகுதிகளில் பொதுமக்களால் அசுத்தப்படுத்தப்படுகிறது. அதோடு, பல இடங்களில் மாநகராட்சியால் கழிவுநீர் கலந்துவிடப்படுகிறது. இந்நிலையில், மாநகருக்குள் வைகை ஆறு நுழையும் திண்டுக்கல் பிரதான சாலை சாலை முதல் மதிச்சியம் வரை உள்ள பகுதிகளில் மனிதக் கழிவுகள் மற்றும் குப்பைகளால் ஏற்படக்கூடிய சுகாதாரச் சீர்கேட்டைத் தடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் ஆட்சியர் தலைமையில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் மதுரை மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறையினர், தன்னார்வ அமைப்பினர், கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன.

     வைகை ஆற்றை சீரமைப்பது தொடர்பான வழிகாட்டுதல் குழுவின் கூட்டம், ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

     மாவட்ட வருவாய் அலுவலர் கே.வேலுச்சாமி, மாநகராட்சி உதவி ஆணையர் செல்வநாதன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் நல்லகாமன், தானம் அறக்கட்டளை செயல் இயக்குநர் வாசிமலை, ஸ்ரீமீனாட்சி, பாத்திமா, டோக் பெருமாட்டி, தியாகராஜர், மன்னர், செளராஷ்டிரா ஆகிய கல்லூரிகளில் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

     கல்லூரி மாணவர்கள், சமூக சேவை அமைப்பினர், மாநகராட்சி, வனத் துறை மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மூலம் மாநகராட்சி பகுதியில் உள்ள வைகை ஆற்றைச் சுத்தப்படுத்தல், இருகரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், கழிவுநீர் கலக்காமல் தடுத்தல், சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்தி பலன்தரும் மரங்களை நடுதல் மற்றும் பெளர்ணமி தினங்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி அதன்மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்ற செயல் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. வரும் அக்டோபர் 10-ஆம் தேதி வைகை ஆறு தூய்மைப்படுத்தும் பணியைத் தொடங்குவது எனக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai