Enable Javscript for better performance
ஆட்டோ பயணிகள் குறைகளைக் கூற கட்டணமில்லா தொலைபேசி எண்: ஆட்சியர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    ஆட்டோ பயணிகள் குறைகளைக் கூற கட்டணமில்லா தொலைபேசி எண்: ஆட்சியர் தகவல்

    By மதுரை  |   Published on : 11th September 2015 06:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆட்டோ பயணிகள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க கட்டணமில்லா எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

     மதுரையில் இயங்குகிற ஆட்டோக்களில் பயணிகள் வசதிக்காக 1800 425 5430 எனும் கட்டணமில்லா எண் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணியினை மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் புதன்கிழமை தொடக்கி வைத்தார். அப்போது அவர் தெரிவித்தது:

     சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து ஆட்டோக்களிலும் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் புகைப்படங்கள், அலைபேசி எண்கள், மற்றும் ஓட்டுநர்களின் உரிமம் பற்றிய விவரங்களை ஓட்டுநர் இருக்கைக்கு பின்புறம் பயணிகள் பார்வையில் படும்படி ஒட்ட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அதன்படி மதுரை மாநகரில் இயங்கும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் உள்பட மாவட்டம் முழுவதும் இயங்கும் 13 ஆயிரம் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

     ஆட்டோக்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் ஏதேனும் முறைகேடுகள், பொருள்களைத் தவறவிடுதல், கூடுதல் கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட சட்ட விதிமீறல் பற்றிய புகார்களை 1800 425 5430 என்ற கட்டணமில்லா எண்ணில் தெரிவிக்கலாம். இப்புகார்கள் அனைத்தும் சென்னை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அல்லது காவல்துறையினரிடம் தெரிவிக்கப்பட்டு இரண்டு நாள்களுக்குள் உரியத் தீர்வு கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

    அனைத்துப் பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், ஆட்டோ நிறுத்தங்களிலும் இந்த கட்டணமில்லா தொலைபேசி எண் பொதுமக்கள் பார்வையில் படும்படி விளம்பரப்படுத்தப்படும் என்றார்.

     இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கே.கல்யாண்குமார், ஜே.கே.பாஸ்கரன், எம்.சிங்காரவேலு, போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையர்கள் திருமலைக்குமார், முருகேசன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மணிமாறன், கதிர்வேல், ராஜ்குமார், ஏ.கே.முருகன், பூர்ணலதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai