Enable Javscript for better performance
உசிலை.யில் தனியார் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    உசிலை.யில் தனியார் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

    By உசிலம்பட்டி  |   Published on : 11th September 2015 03:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உசிலம்பட்டியில் உள்ள தனியார் பெண்கள் பள்ளி விடுதியில் ப்ளஸ் 2 படிக்கும் மாணவி வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

     திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள சித்தர்கள்நத்தத்தைச் சேர்ந்த குமரேசன் மகள் சிவசக்தி (17). இவர் விடுதியில் தங்கி படித்துவந்தார். வியாழக்கிழமை காலை காலாண்டு தேர்வு தமிழ் முதல் தாள் எழுதியுள்ளார். மதிய உணவு இடைவேளையின் போது சாப்பிடாமல் மன இறுக்கத்துடன் இருந்துள்ளார். அனைவரும் வகுப்புக்குச் சென்றுவிட்ட நிலையில், அவரைக் காணாததால் காப்பாளர் ஜோதி தேடி வந்துள்ளார். சிவசக்தியினுடைய அறை பூட்டி இருந்ததால் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது சிவசக்தி தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து கத்தியுள்ளார். பின்னர் சமையல் மாஸ்டர் பெருமாள் கதவை உடைத்து சிவசக்தியை கீழே இறக்கியுள்ளார். சிவசக்தியை உடனடியாக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் சரவணக்குமார், ஆய்வாளர் துரைசுப்பிரமணியன், சார்பு ஆய்வாளர் சரவணன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai