Enable Javscript for better performance
குடும்பப் பிரச்னையில் 2 பெண்கள் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் குடும்பப் பிரச்னை காரணமாக வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

     மதுரை காமராஜர் சாலையைச் சேர்ந்த பிச்சை மனைவி ராஜேஸ்வரி (19). தாய் வீட்டிலிருந்த ராஜேஸ்வரி கடந்த செவ்வாய்க்கிழமை உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டார். மதுரை அரசு மருத்துவமனையில்,  தீவிர சிகிச்சை அளித்த நிலையில் பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தார். தெப்பக்குளம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     ஆழ்வார்புரம் பகுதியைச் சேர்ந்த எழுமலை மனைவி விஜயா (47). கடந்த 4-ஆம் தேதி தீக்குளித்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார். மதிச்சியம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai