Enable Javscript for better performance
குப்பை லாரி மோதி பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் வியாழக்கிழமை குப்பை லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார்.

     மதுரை வில்லாபுரம் ஹவுசிங்போர்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவரது மனைவி முத்துலட்சுமி (47). இவர் தனது மோட்டார் சைக்கிளில் அவனியாபுரம் நோக்கிச் சென்றார்.

     அவனியாபுரம்-பைபாஸ் சாலை சந்திப்பு பெரியார் சிலை அருகே அவர் சென்ற போது பின்னால் வந்த மாநகராட்சி குப்பை அள்ளும் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய முத்துலட்சுமி கீழே விழுந்தார். அப்போது அவர் மீது லாரி ஏறியதில் முத்துலட்சுமி உடல் நசுங்கி உயிரிழந்தார்.

     தகவலறிந்த மதுரை மாநகர் போக்குவரத்து நுண்ணறிவுப் பிரிவினர் விரைந்து சென்று முத்துலட்சுமி சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

     குப்பை லாரி ஓட்டுநர் சங்கரனையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai