Enable Javscript for better performance
கோவில்பட்டியில் நடந்த கொலை: மேலூரில் ஒருவர் சரண்- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டியில் நடந்த கொலை: மேலூரில் ஒருவர் சரண்

    By மேலூர்  |   Published on : 11th September 2015 06:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டியில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவர் மேலூர் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார்.

    தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கடந்த ஆக.13-இல் ஜெயபாலன் என்பவர்  கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து குற்றவாளிகளைத் தேடிவந்தனர். இந்நிலையில், கொலை வழக்கில் தொடர்புடைய கோவில்பட்டியைச் சேர்ந்த ராமசாமி மகன் பாலகிருஷ்ணன், மேலூர் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார். அவரை செப்.14-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், அதுவரை மதுரை மத்திய சிறையில் காவலில் வைக்குமாறும் மாஜிஸ்திரேட் கே.வி.மகேந்திரபூபதி உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai