Enable Javscript for better performance
தற்கொலை எண்ணங்கள் தடுக்கக் கூடியவையே: மருத்துவக் கருத்தரங்கில் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    தற்கொலை எண்ணங்கள் தடுக்கக் கூடியவையே: மருத்துவக் கருத்தரங்கில் தகவல்

    By மதுரை  |   Published on : 11th September 2015 06:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தற்கொலை எண்ணங்கள் தடுக்கக்கூடியவையே என மதுரையில் நடைபெற்ற மருத்துவக் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

     உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மருத்துவ கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் மனநல மருத்துவ நிபுணர் கார்த்திகேயன் பேசியது:

     இந்தியாவில்  ஆண்டுக்கு 2 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர்.  தமிழகத்தில் குடிப்பழக்கம் காரணமாக குடிப்பவர் மற்றும் குடிப்பவரின் குடும்பத்தினர் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்கொலை எண்ணத்திற்கு குடிப்பழக்கம் பெரும்பங்கு வகிக்கிறது. ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்படும்போது உறவினர்கள், நண்பர்கள் அல்லது நெருக்கமானவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபட இதுபெரும் உதவியாக இருக்கும். தற்கொலை எண்ணம் தொடர்ந்து நீடித்தால் மனநல மருத்துவரிடம் தொடர் சிகிச்சை எடுப்பதன் மூலம் குணமடையலாம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai