Enable Javscript for better performance
தொண்டு வாழ்க்கையே அமைதியைத் தரும்: சுவாமி சுந்தரானந்த சரஸ்வதி- Dinamani

சுடச்சுட

    

    தொண்டு வாழ்க்கையே அமைதியைத் தரும்: சுவாமி சுந்தரானந்த சரஸ்வதி

    By மதுரை  |   Published on : 11th September 2015 06:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேவையுடன் கூடிய தொண்டுள்ள வாழ்க்கையே பரிபூரண அமைதியைத் தரும் என மதுரை தெய்வநெறிக் கழகத்தலைவர் சுவாமி சுந்தரானந்த சரஸ்வதி கூறினார்.

     மதுரை தெய்வநெறிக்கழகத்தின் சார்பில் குருதேவர் 129ஆவது ஜயந்தி, தெய்வநெறிக்கழக 77ஆவது ஆண்டு விழா மற்றும் சிவானந்த தபோவனத்தின் 48ஆவது ஆண்டு விழா ஆகிய முப்பெரும் நிகழ்வு திரிவேணி விழாவாக நடத்தப்பட்டது.

      மதுரை அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில், செப்.1இல் தொடங்கிய விழா செவ்வாய்க்கிழமை இரவு நிறைவுபெற்றது.

    நிறைவு விழாவில் பங்கேற்று சுந்தரானந்த சரஸ்வதி ஆற்றிய அருளுரை:

    நாம் தர்மத்தை மீறாமல் வாழவேண்டும். தர்மத்தை நாம் காத்தால் தர்மம் நம்மைக் காக்கும். சுவாமி சிவானந்தரும் இதையே வலியுறுத்துகிறார்.

     ஒருவர் தொண்டுள்ளத்துடன், சமூகத்துக்கு சேவை செய்து வாழ்வதே தெய்வநெறி சார்ந்த வாழ்க்கையாகும். அத்தகைய வாழ்க்கை வாழ்ந்து வருவோருக்கு பரிபூரண அமைதி கிட்டும் என்றார்.

     விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு திருக்குறள், திருவாசகம், பகவத்கீதை ஒப்புவித்தல் போட்டிகளும் நடைபெற்றன.

     அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான நா.நடராஜன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கினர். 

    பாலா நந்தகுமார் குழுவினரின் கலை நடன நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. சி.எஸ்.கிஷோர்குமார் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai