Enable Javscript for better performance
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அதிகாரி சகாயத்துக்கு நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அதிகாரி சகாயத்துக்கு நோட்டீஸ்

    By மதுரை  |   Published on : 11th September 2015 06:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரும் வழக்கில் பதில் அளிக்குமாறு  மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியரும், கனிமவள முறைகேடுகளை விசாரிக்கும் தனி அலுவலருமான உ.சகாயத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

     மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பையா இவ்வாறு உத்தரவிட்டார். மனுவில், மதுரை நிலையூர் பகுதியில் 2012 -இல் 20 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. அந்த இடத்தில் வீடு கட்டச் சென்ற போது சிலர் தடுத்து மிரட்டினர். அந்த இடம் ஏற்கெனவே வேறு சிலருக்கு ஒதுக்கிய இடம் எனத் தெரியவந்தது. இதனால் போலி பட்டாக்களை விநியோகித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி அப்போதைய மாவட்ட ஆட்சியர் உ.சகாயம் மற்றும் நேர்முக உதவியாளர் (நிலம்) ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்தேன். அந்த வழக்கு விசாரணையின் போது 20 பேருக்கும் வேறு இடத்தில் பட்டா வழங்கப்படும் என ஆட்சியர் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் புதிய இடத்திற்கான பட்டா வழங்கப்படவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக அப்போதைய மாவட்ட ஆட்சியர், மற்றும் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

     இம்மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க உ.சகாயம் உள்ளிட்டோருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai