Enable Javscript for better performance
பாலம் கட்டுமானப் பணியில் மின்சாரம் பாய்ந்து உ.பி. மாநில இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பாலம் கட்டுமானப் பணியில் மின்சாரம் பாய்ந்து உ.பி. மாநில இளைஞர் சாவு

    By மதுரை  |   Published on : 11th September 2015 06:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் மின்சாரம் பாய்ந்ததில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார்.

     உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் மதுரையில் தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பிலான பாலம் உள்ளிட்ட கட்டடப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் ராம்சுரம், அவரது சகோதரர் ஜெகதீஷ் (22) ஆகியோர் புதன்கிழமை பகலில் சாப்பிட்டுள்ளனர்.

     பின்னர் ஜெகதீஷ் கைகழுவுவதற்காக சென்றுள்ளார். அப்போது மண் சறுக்கியதால், அருகிலிருந்த இரும்புக்கம்பியை பிடித்துள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் ஜெகதீஷ் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து செல்லூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai