Enable Javscript for better performance
மாவட்ட அளவிலான  விளையாட்டு போட்டிகள் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கத்தில் புதன்கிழமை தொடங்கியது.

     மதுரை கல்வி மாவட்ட உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் உடற்கல்விக் கழகமும், விருதுநகர் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியும் இணைந்து நடத்தும் மதுரை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளின் தொடக்க விழா மதுரை எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

     விருதுநகர் இந்து நாடார்(வி.ஹெச்.என்) பள்ளிகளின் தாளாளர் ஜி.கணேசன் வரவேற்றார். மாவட்டக் கல்வி அலுவலர் பி.சீனிவாசமூர்த்தி மற்றும் வி.ஹெச்.என். பள்ளிகளின் துணைத்தலைவர் ஜே.அசோகன், பொருளாளர் பி.மோகன், தலைமை ஆசிரியர் எல்.ஜெயசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தலைவர் வாச.ஜெயப்பிரகாஷ் ஒலிம்பிக் கொடி ஏற்றினார். மதுரைக் கல்வி மாவட்ட கழகக் கொடியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஆர்.பரமேஸ்வரி ஏற்றி வைத்து போட்டிகளைத் தொடக்கி வைத்தார்.

     இதையடுத்து வி.ஹெச்.என். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மதுரை கூடைப்பந்து கழகச் செயலர் கே.வசந்தவேல் பரிசு வழங்கினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai