Enable Javscript for better performance
முதலீடுகளால் தென்தமிழகத்துக்கு பயன் கிடைக்க வேண்டும்: வைகோ- Dinamani

சுடச்சுட

    

    முதலீடுகளால் தென்தமிழகத்துக்கு பயன் கிடைக்க வேண்டும்: வைகோ

    By மதுரை  |   Published on : 11th September 2015 06:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதிய தொழில் முதலீடுகளால் தென்தமிழகத்துக்கும் பலன் கிடைக்கச் செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.

     மதுரை விமான நிலையத்தில் வியாழக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினால் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கோடி அளவிலான முதலீடுகள் கிடைக்கும் என தமிழக முதல்வர் கூறியுள்ளார்.

       சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அதிக அளவு தொழிற்சாலைகள் உள்ளன. எனவே புதிய தொழில் முதலீடுகளால் தென்மாவட்டங்களுக்கு பயன் கிடைக்கச் செய்ய வேண்டியது அவசியம். அவ்வாறு தென் தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் பெருகி மக்களுக்கு பயன்படும் என்றால் அதை வரவேற்கிறோம்.

         கர்நாடக அணைகளில் போதிய நீர் இருந்தும் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் மறுக்கிறது. மத்திய அரசு திட்டமிட்டு தமிழக அரசை ஏமாற்றுகிறது. தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் பரிதவிக்கின்றனர்.

       எனவே இது தொடர்பாக தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai