Enable Javscript for better performance
ராணுவப் பணி எழுத்துத் தேர்வு: இலவசப் பயிற்சி நாளை தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ராணுவப் பணி எழுத்துத் தேர்வு: இலவசப் பயிற்சி நாளை தொடக்கம்

    By மதுரை  |   Published on : 11th September 2015 06:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராணுவப் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் இலவசப் பயிற்சி வகுப்பு சனிக்கிழமை (செப்.12) தொடங்கி அக்.25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

        கோவை ராணுவ ஆள்தேர்வு மையம் மூலமாக தருமபுரியில் அண்மையில் உடற்தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், இரண்டாம் கட்ட எழுத்துத் தேர்விற்கு தயார் செய்யும் வகையில் இலவசப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

         மதுரை, மேலூர் மற்றும் திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி, திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு திருமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, உசிலம்பட்டி பகுதியினருக்கு உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, பேரையூர் பகுதியினருக்கு பேரையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில்  செப்.12 முதல் அக்.25-ஆம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படும். உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மதுரை மாவட்ட இளைஞர்களுக்கு, இந்த இலவசப் பயிற்சி குறித்து கடிதம் மூலமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வுக்குத் தயாராகி வரும் இளைஞர்கள், இந்த பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.  மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai