Enable Javscript for better performance
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

    By திருப்பரங்குன்றம்  |   Published on : 11th September 2015 06:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பரங்குன்றம் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

    திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமை வகித்து பயிற்சியைத் தொடக்கிவைத்தார். தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் குணசேகரன் பயிற்சி அளித்தார்.

    பயிற்சியில் செப்.15 ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதில் 2016 ஜன.1 ஆம் தேதி 18 வயது பூர்த்தியாகக் கூடியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தால் அவர்களின் பெயரை நீக்கவேண்டும்.

    வாக்காளர் பட்டியல் துல்லியமாக இருக்க வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் கண்காணிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதில் சத்துணவுப் பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் 130 பேர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai