Enable Javscript for better performance
ஆதார் அட்டை கட்டாயம் அல்ல என அரசாணை வெளியிடக் கோரி வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    ஆதார் அட்டை கட்டாயம் அல்ல என அரசாணை வெளியிடக் கோரி வழக்கு

    By மதுரை  |   Published on : 12th September 2015 05:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசின் சலுகைகளைப் பெற ஆதார் அட்டை கட்டாயமல்ல என அரசாணை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரும் மனுவுக்கு தலைமைச் செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

     சிவகாசியைச் சேர்ந்த வழக்குரைஞர் ஏ.இ.செபாஸ்டின்ராஜ் தாக்கல் செய்த மனு: எந்த ஒரு அரசு சலுகையைப் பெறவும் ஆதார் எண்ணைத் தாக்கல் செய்யுமாறு அரசுகள் கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் 2013 இல் உத்தரவிட்டது.

      இந்த உத்தரவை அரசாணை அல்லது சுற்றறிக்கை மூலம் அனைத்து அதிகாரிகளுக்கும் தமிழக அரசு தெரிவித்து இருக்க வேண்டும்.

     அவ்வாறு செய்யாததால் 100 நாள் வேலைத் திட்ட ஊதியம், முதியோர் ஓய்வூதியம் போன்றவற்றை பெற மாவட்ட ஆட்சியர்கள் ஆதார் எண் அளிக்குமாறு கட்டாயப்படுத்தி வருகின்றனர். எனவே உச்சநீதி மன்ற உத்தரவைப் பின்பற்றி அனைத்து அரசு சலுகைகளையும், மானிய உதவிகளையும் பெற ஆதார் அட்டை கட்டாயம் அல்ல என்று அரசாணை அல்லது சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

     இம்மனுவை நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது. மனுவுக்கு தமிழக தலைமைச் செயலர் 3 வாரங்களில் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai