Enable Javscript for better performance
எஸ்.ஆர்.எம்.யு. வேலை நிறுத்த விளக்கக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரைக் கோட்ட சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியனின் (எஸ்.ஆர்.எம்.யு.) ரயில்வே கார்டு பிரிவு சார்பில் அகில இந்திய வேலை நிறுத்தத்துக்கான விளக்கக் கூட்டம் மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

     மத்திய அரசை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் உள்பட மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் நவம்பர் 23 ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதற்கான விளக்கக் கூட்டம் எஸ்.ஆர்.எம்.யு. ரயில்வே கார்டு பிரிவின் தலைவர் கஜானா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

     கோட்டச் செயலர் ஜெ.எம்.ரபீக், உதவி கோட்டச் செயலர் ராம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இதில் பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில் கார்டுகளுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்க வேண்டும், சரக்கு ரயில் கார்டுகளுக்கு முறையான வார விடுப்பு அளிக்கப்பட வேண்டும். வேலை நேரத்தை 13 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாக குறைக்க வேண்டும். பயணங்களின் போது ரயில்வே கார்டுகளுக்கு சுகாதாரமான உணவு மற்றும் தங்கும் விடுதி அமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கிளைச் செயலர் மோகன் குமார், உதவிச் செயலர்கள் சேகர், முருகேசன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட ரயில்வே கார்டுகள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai