Enable Javscript for better performance
கல்லூரியில் தாத்தா, பாட்டிகள் தின விழா- Dinamani

சுடச்சுட

    

    முதியோர்களின் தேவையை உணர்த்தும் நோக்கில் டோக் பெருமாட்டி கல்லூரியில் தாத்தா, பாட்டிகள் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

     மதுரை பெத்சான் சிறப்பு பள்ளி மற்றும் டோக் பெருமாட்டி கல்லூரி இணைந்து நடத்திய இவ்விழாவை தொழிலதிபர் பெனிட்கரன் தொடங்கி வைத்தார். இதில் முதியோர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கல்லூரி மாணவிகளின் நாடகம் நடைபெற்றது. இதையடுத்து பெத்சான் சிறப்பு பள்ளி மாணவர்களின் தாத்தா, பாட்டிகளுடனான கலந்துரையாடல் நடந்தது. டோக் பெருமாட்டி கல்லூரி சமூக அறிவியல் துறை பேராசிரியர் ரூபா ரவிக்குமார், பெத்சான் சிறப்பு பள்ளி முதல்வர் ரவிக்குமார், ஒருங்கிணைப்பாளர் ஜெயபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai