Enable Javscript for better performance
குழந்தை கடத்தல் விவகாரம்: அரசு மருத்துவமனை டீன் ஆஜராக உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    குழந்தை கடத்தல் விவகாரம்: அரசு மருத்துவமனை டீன் ஆஜராக உத்தரவு

    By மதுரை  |   Published on : 12th September 2015 05:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தை மாயமான சம்பவம் தொடர்பாக திங்கள்கிழமை டீன் ஆஜராக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

     மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள பொம்மனம்பட்டியைச் சேர்ந்த தினகரன் மனைவி மீனாட்சி. மதுரை அரசு மருத்துவமனையில் 2013 ஜூன் மாதம் இவருக்குப் பிறந்த ஆண் குழந்தை கடத்தப்பட்டது. இச்சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி மீனாட்சி தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விசாரித்து வருகிறது. இம்மனு விசாரணைக்கு பலமுறை வந்துள்ளது. அப்போதெல்லாம் குழந்தையை கண்டுபிடிக்க போலீஸார் அவகாசம் கோரினர். உயர்நீதிமன்றமும் அவகாசம் அளித்து வந்தது.

     இதற்கிடையே திருப்பூரில் இருந்து ஒரு குழந்தையை போலீஸார் கொண்டு வந்தனர். அந்த குழந்தை டிஎன்ஏ பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட போது, அது மீனாட்சியின் குழந்தை அல்ல என்பது தெரியவந்தது. இதன் பிறகு மனு விசாரணைக்கு வந்த போது, குழந்தையைக் கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு உயர்நீதிமன்றம் மேலும் அவகாசம் அளித்திருந்தது. இந்நிலையில் இவ்வழக்கு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது குழந்தையை கண்டுபிடிக்க விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவமனை பிரசவ வார்டின் நிலை குறித்து ஆய்வு செய்ய 2 வழக்குரைஞர் ஆணையர்களை நீதிபதிகள் நியமித்தனர். அவர்கள் மருத்துவமனையில் ஆய்வு செய்து குழந்தைகள் கடத்தலை தடுக்கவும், குழந்தைகள் பிரிவை மேம்படுத்தவும் உரிய ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையை திங்கள்கிழமை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். அன்றைய தினம் அரசு மருத்துவமனை டீன் ஆஜராகவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    வழக்குரைஞர் ஆணையர்கள் ஆய்வு

    உயர்நீதிமன்ற உத்தரவின்படி, வழக்குரைஞர் ஆணையர்களான உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பெண் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவி ஜெ.நிஷா பானு, ஜெ.ஆனந்தவள்ளி ஆகியோர் அரசு மருத்துவமனைக்குச் சென்று பிரசவ வார்டு மற்றும் குழந்தைகள் வார்டு ஆகியவற்றை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai