Enable Javscript for better performance
சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு உதவித் தொகை- Dinamani

சுடச்சுட

    

    சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு உதவித் தொகை

    By மதுரை  |   Published on : 12th September 2015 05:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் இருவருக்கு தலா ரூ.5 ஆயிரம் உதவித் தொகையை ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் வழங்கினார்.

     மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள அன்பகம் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்புப் பள்ளியில் படிக்கும் மாணவி தேவி மற்றும் மாணவர் மணிகண்டன் ஆகியோர் அமெரிக்காவில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர். இதில் தேவி 1000 மீட்டர் ரோலர் ஸ்கேட்டிங், 300 மீட்டர் ரோலர் ஸ்கேட்டிங் பிரிவில் இரு வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.

     கால்பந்து போட்டியில் மாணவர் மணிகண்டன், வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இவர்கள் இருவரையும் பாராட்டி, ஆட்சியரின் தன் விருப்ப நிதியில் இருந்து தலா ரூ.5 ஆயிரம் உதவித் தொகைக்கான காசோலையை ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் வழங்கினார்.

     மாவட்ட வருவாய் அலுவலர் கே.வேலுச்சாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) என்.ஆறுமுகநயினார், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சகுந்தலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai