Enable Javscript for better performance
சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை பெற கால அவகாசம் நீட்டிப்பு: ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை பெற கால அவகாசம் நீட்டிப்பு: ஆட்சியர்

    By மதுரை  |   Published on : 12th September 2015 05:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிறுபான்மையின மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

     இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  அரசு, அரசு உதவிபெறும், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் படிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. 2015-16 ஆம் கல்வி ஆண்டுக்கு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

     இதன்படி, ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் கல்வி உதவித் தொகை பெற செப்.25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஒன்பதாம் வகுப்பு முதல் பிஎச்டி பட்டமேற்படிப்பு மற்றும் தொழில் நுட்பக் கல்வி படிப்பவர்கள் இணையதளம் மூலமாக  அக்டோபர் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai