Enable Javscript for better performance
சோழவந்தானில் பிடிபட்ட 8 அடி நீள மலைப்பாம்பு- Dinamani

சுடச்சுட

    

    சோழவந்தானில் பிடிபட்ட 8 அடி நீள மலைப்பாம்பு

    By வாடிப்பட்டி  |   Published on : 12th September 2015 05:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சோழவந்தான் அருகே தெ.புதூர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை 8 அடி நீள  மலைப்பாம்பு பிடிபட்டது.

    சோழவந்தான் அருகே உள்ள தெ.புதூர் கிராமத்தில் சில நாள்களாக மலைப்பாம்புகள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காஞ்சிவனம் என்பவர் வீட்டுக்குள் மலைப்பாம்பு புகுந்தது. இதைக் கண்ட அவர் கிராமத்தில் உள்ளவர்களை அழைத்து வருவதற்குள் அது அங்கிருந்து தப்பி விட்டது. உடனடியாக சோழவந்தான் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

     நிலைய அலுவலர் உமையன்குமார் உள்பட தீயணைப்பு படையினர் அங்கு வந்து 4 மணி நேரம் போராடி 8 அடி நீள மலைப்பாம்பை பிடித்து சோழவந்தான் வனச் சரகர் சுசுந்தரபாண்டியன், வனவர் சோணைமுத்து மற்றும் பணியாளர்களிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் மன்னாடிமங்கலம் வனப் பகுதியில் அந்த மலைப்பாம்பை கொண்டு சென்று விட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai