திமுகவினர் தெருமுனை பிரசாரம்
By மேலூர் | Published on : 12th September 2015 05:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செப். 25ஆம் தேதி மேலூர் வருவதையொட்டி திமுகவினர் மேலூரில் வெள்ளிக்கிழமை 7 இடங்களில் தெருமுனை பிரசாரம் செய்தனர்.
மேலூர் நகர் செயலர் யு.யாசின், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் கரு.தி.அறிவுமணி, கே.ஆர்.அழகுபாண்டி, மேலூர் நகர் அமைப்பாளர் நாச்சிமுத்து மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர். ஸ்டாலின் சுற்றுப்பயணம் குறித்து திமுக தலைமைக் கழக பேச்சாளர் சுஜாதா விளக்கம் அளித்தார்.