Enable Javscript for better performance
துள்ளுக்குட்டிநாயக்கனூருக்கு பேருந்து வசதி- Dinamani

சுடச்சுட

    

    துள்ளுக்குட்டிநாயக்கனூருக்கு பேருந்து வசதி

    By உசிலம்பட்டி  |   Published on : 12th September 2015 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உசிலம்பட்டியிலிருந்து எம்.கல்லுப்பட்டி செல்லம் வழியில் உள்ளது, துள்ளுக்குட்டி நாயக்கனூர். சாலையில் பேருந்தில் இருந்து இறங்கி, சுமார் 1 கி.மீ. தூரம் நடந்து  துள்ளுக்குட்டி நாயக்கனூருக்கு மக்கள் செல்ல வேண்டியிருந்தது. இந்நிலையில் காலை மாலை இரு நேரங்களிலும் உசிலம்பட்டி - எம்.கல்லுப்பட்டி செல்லும் பேருந்துகள் சிலவற்றை துள்ளுக்குட்டி நாயக்கனூர் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி பேருந்து இயக்கத்தை உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி.கதிரவன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.   விழாவில் மதுரை அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் வீரபாண்டியன், பொது மேலாளர் உதயகுமார்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai