Enable Javscript for better performance
பட்டயக் கணக்கு மாணவர்களுக்கான தேசிய மாநாடு தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பட்டயக் கணக்கு மாணவர்களுக்கான தேசிய மாநாடு தொடக்கம்

    By மதுரை  |   Published on : 12th September 2015 05:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பட்டயக் கணக்கு மாணவர்களுக்கான தேசிய மாநாடு மதுரையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

    இந்திய பட்டயக் கணக்காளர் நிலையம் (ஐ.சி.ஏ.ஐ) சார்பில் உதயம் எனும் தலைப்பில் பட்டயக் கணக்கு மாணவர்களுக்கான தேசிய மாநாடு, மதுரையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டில், தமிழகம் முழுவதிலும் இருந்து 600-க்கும் மேற்பட்ட பட்டயக் கணக்கு மாணவர்கள் கலந்து கொண்டனர். இரண்டு நாள்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பட்டயக் கணக்காளர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளிக்க உள்ளனர். தொடக்க விழாவுக்கு இந்திய பட்டயக் கணக்காளர் நிலையத்தின் ஆய்வுகள் குழுத் தலைவர் வி.முரளி தலைமை வகித்தார்.

    இதில் பட்டயக் கணக்காளர்கள் வாழ்வில் தொழில் நுட்பத்தின் பங்கு எனும் தலைப்பில் மா பாய் குழுமத் தலைவர் கே.பாண்டியராஜன் பேசியதாவது:

    சந்தையில் ஒரு பெரு நிறுவனத்தின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பது அதன் பின்னால் இயங்கும் பட்டயக் கணக்காளர்களே. கடந்த பத்தாண்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பட்டயக் கணக்காளர் பணியை விட்டு வேறு பணிக்குச் சென்றுள்ளனர். தொழில் நுட்ப வசதிகள் குறித்து அவர்கள் தெரிந்து கொள்ளாமல் இருந்ததே இதற்கு காரணம். 

    சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதம் வளர்ச்சி ஏற்படும். இதனால் 4 லட்சம் தொழில் வாய்ப்புகள் உருவாகும். இதுபோன்ற பல நுண் விஷயங்களைக் கூட பட்டயக் கணக்காளர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றார்.

    மாணவர்களின் கேள்விகளுக்கு இந்திய பட்டயக் கணக்காளர் நிலையத்தின் ஆய்வுக் குழுத் தலைவர் வி.முரளி பதிலளித்தார். இதில் பட்டயக் கணக்காளர்கள் கபிலேஷ்வர் பல்லா, சாய் பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுடன் விவாதம் நடத்தினர். இந்திய பட்டயக் கணக்காளர் நிலைய மத்தியக் குழு உறுப்பினர் எஸ்.சந்தானகிருஷ்ணன், ஆய்வுக் குழு துணைத் தலைவர் நிலேஷ் எஸ்.விகாம்சே, மதுரை கிளை ஒருங்கிணைப்பாளர் டி.மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai