Enable Javscript for better performance
மதுரை அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதி பெண் உள்பட 3 பேர் பலி; 6 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதி பெண் உள்பட 3 பேர் பலி; 6 பேர் காயம்

    By மேலூர்  |   Published on : 12th September 2015 05:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை அருகே வெள்ளிக்கிழமை நின்று கொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் உள்பட 3 பேர் இறந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.

     மதுரையிலிருந்து திருச்சி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, கச்சிராயன்பட்டி விலக்கு அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியது. இதில் பேருந்து பயணிகளான கருங்காலக்குடியை சேர்ந்த நாராயணன் மனைவி மகராசி (45), திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் சிறுகுடி அருகே உள்ள நல்லக்காபட்டியை சேர்ந்த தேங்காய் வெட்டும் கூலித் தொழிலாளி பழனிச்சாமி (40) ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

     லாரி ஓட்டுநரான ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த காளிதாஸ் (40), லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு அருகிலுள்ள உணவகத்தில் சாப்பிட சென்றார். அப்போது அவரது லாரிக்கு முன்னாள் மற்றொரு லாரியை நிறுத்தி இருந்த அதன் ஓட்டுநர் பொன்ராஜிடம் (40) காளிதாஸ் பேசிக் கொண்டிருந்தார்.  அரசுப் பேருந்து காளிதாஸ் லாரி மீது மோதியதும் அந்த லாரி அதிர்வுடன் முன்னாள் நின்ற லாரி மீது மோதியது.

     இதில் அந்த லாரி சக்கரத்தில் சிக்கி காளிதாஸ் அதே இடத்தில் இறந்தார்.   இந்த விபத்தில், லாரி ஓட்டுநர் பொன்ராஜ், பேருந்து பயணிகளான நீலமேகம், தன்ராஜ், குமார், சூர்யா உள்ளிட்ட 6 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவருக்கும் மேலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

     இந்த சம்பவம் தொடர்பாக, அரசுப் பேருந்து ஓட்டுநர் குமாரவேல் (29) காயமின்றி தப்பினார். விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai