வாக்காளர் பட்டியல் திருத்த பயிற்சி முகாம்
By வாடிப்பட்டி | Published on : 12th September 2015 05:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு வாக்காளர்பட்டியல் சுருக்கத் திருத்த பயிற்சி முகாம் வாடிப்பட்டியில் 3 நாள்கள் நடைபெற்றது. முகாமுக்கு வட்டாட்சியர் ராம திருமலை தலைமை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சிவக்குமார், மண்டல துணை வட்டாட்சியர் மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வருவாய் ஆய்வாளர் முத்துசங்கரன் வரவேற்றார். முகாமில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமாரி பயிற்சியளித்தார். இதில் கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். தேர்தல் பிரிவு உதவியாளர் அழகர்சாமி நன்றி கூறினார்.