Enable Javscript for better performance
வாசனை திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    வாசனை திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம்

    By திருப்பரங்குன்றம்  |   Published on : 12th September 2015 05:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெருங்குடி சரசுவதி நாராயணன் கல்லூரியில், வாசனை திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

     வேதியியல் துறை சார்பில் நடந்த இந்த சிறப்பு கருத்தரங்கத்துக்கு கல்லூரி முதல்வர் மு.கண்ணன் தலைமை வகித்தார். துறைத் தலைவர் மு.மு.மோதிலால் வரவேற்றார். இதில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள தனியார் வாசனைத் திரவியம் தயாரிக்கும் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு முதன்மை ஆய்வாளர் சுகுமார் பாண்டியன் பேசியதாவது:  வேதியியல் துறை மாணவர்களுக்கு வாசனை திரவியங்கள் தயாரிப்பு தொழிலில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் குறிப்பாக மும்பை மற்றும் குஜராத் மாநிலங்களில் 450க்கும் மேற்பட்ட வாசனை திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றுக்கு அமெரிக்கா, வளைகுடா உள்ளிட்ட வெளிநாடுகளில் நல்ல வரவேற்புள்ளது என்றார். மாணவி தங்கரோஜா நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai